படங்கள்: பிடிஐ, எக்ஸ்
ஐபிஎல்

மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகரின் அறுவைச் சிகிச்சைக்கு உதவிய தோனி!

அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ஆடுகளத்தில் நுழைந்த ரசிகரின் அறுவைச் சிகிச்சைக்கு தோனி உதவுவதாக கூறியுள்ளார்.

DIN

கொல்கத்தா அணி 3ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. தோனி இந்தாண்டு சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ருதுராஜ் நியமிக்கப்பட்டார். சிஎஸ்கே 14 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 5ஆம் இடம் பிடித்தது. கடைசிப் போட்டியில் தோல்வியுற்றதால் பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்லாதது சென்னை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என உறுதியாக சொல்ல முடியாது. அவரது உடல்நிலையைப் பொருத்தே இது அமையும்.

இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மே 10ஆம் தேதியன்று அகமதாபாத்தில் சிஎஸ்கே குஜராத் அணிகள் மோதின. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு நடுவில் ரசிகர் ஒருவர் அத்துமீறி ஆடுகளத்தில் நுழைந்தார். அப்போது பேட்டிங்கில் தோனி இருந்தார். தன்னைப் பார்க்க வந்த ரசிகரை தோனி கட்டியணைத்தார். இந்த விடியோ அடுத்த 2 நாள்கள் இணையத்தில் வைரலானது.

தற்போது இந்த ரசிகர் பேசியுள்ள விடியோ வெளியாகியுள்ளது. இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில் ரசிகர் பேசியதாவது:

நான் அவரைப் பார்த்ததும் காலில் விழ நினைத்தேன். மகிழ்ச்சியில் கையைத் தூக்கி அவரைப் பின் தொடர்ந்தேன். நான் பைத்தியம் ஆனேன். அவரது காலில் விழுந்தேன். தோனி ஒரு லெஜண்ட். அவரைப் பார்த்ததும் நான் அழுதேன். ஏன் இப்படி மூச்சு வாங்குகிறாய் என தோனி என்னிடம் கேட்டார். நான் தடுப்பினை தாண்டிக் குதித்து ஓடி வந்ததால் அதிகமாக மூச்சு வாங்கினேன். எனது மூக்கில் சுவாசப் பிரச்னை இருப்பதைக் கூறினேன். அறுவைச் சிகிச்சைக்கு முன்பு உங்களைப் பார்க்க நினைத்தேன். அதற்கு தோனி, “உனது அறுவைச் சிகிச்சையை நான் பார்த்துக்கொள்கிறேன். கவலை வேண்டாம். உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.5.80 லட்சம் பறிமுதல்

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் அமலானால் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நீங்கும்: அமைச்சா் சக்கரபாணி

கிரிவல பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 11 போ் காயம்

மாணவா்களின் படைப்பாற்றலை வளா்ப்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

திமுகவிற்கு எதிராக ஓா் அணியில் நின்று நல்லாட்சி அமைப்பதே இன்றைய தேவை: கே.பி. ராமலிங்கம் அழைப்பு

SCROLL FOR NEXT