அங்க்ரிஷ் ரகுவன்ஷி படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் அதிரடி: ஹைதராபாதுக்கு 201 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் விளையாடியது.

ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் அதிரடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. குயிண்டன் டி காக் 1 ரன்னிலும், சுனில் நரைன் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. இருப்பினும், அஜிங்க்யா ரஹானே 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

ரஹானே ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ரகுவன்ஷியுடன் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரகுவன்ஷி 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணையும் அதிரடியைத் தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கொல்கத்தா அணிக்காக 50-வது போட்டியில் விளையாடிய ரிங்கு சிங் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் முகமது ஷமி, பாட் கம்மின்ஸ், ஜீசன் அன்சாரி, ஹர்ஷல் படேல் மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT