சுரேஷ் ரெய்னா (கோப்புப் படம்) 
ஐபிஎல்

இளம் வீரர்களை கேப்டன்களாக உருவாக்கிய ஐபிஎல் தொடர்: சுரேஷ் ரெய்னா

புதிய வீரர்கள் உருவாவதற்கு ஒவ்வொரு ஐபிஎல் சீசனும் வீரர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

DIN

புதிய வீரர்கள் உருவாவதற்கு ஒவ்வொரு ஐபிஎல் சீசனும் வீரர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் தொடங்கவுள்ளது. போட்டிகள் நாளை மறுநாள் முதல் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை எதிர்த்து விளையாடுகிறது.

சுரேஷ் ரெய்னா சொல்வதென்ன?

நாளை மறுநாள் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், புதிய வீரர்கள் உருவாவதற்கு ஒவ்வொரு ஐபிஎல் சீசனும் வீரர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நிறைய இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். இந்திய அணி உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. நிறைய இளம் வீரர்கள் கேப்டன்களாக வளர்ந்துள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து வந்துள்ளனர். அவர்கள் மட்டுமின்றி அதிக அளவிலான வேகப் பந்துவீச்சாளர்கள், ஐபிஎல் தொடரிலிருந்து உருவாகியுள்ளனர்.

புதிய இளம் தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரின் மூலமாக உருவாகியுள்ளனர். திலக் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் போன்ற வீரர்களின் மிகப் பெரிய ரசிகன் நான். நமக்கு அக்‌ஷர் படேல் புதிய கேப்டனாக கிடைத்துள்ளார். இளம் வீரர்கள் அவர்களது விளையாட்டில் கவனம் செலுத்தி, தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட வேண்டும். ஐபிஎல் தொடர் ஒன்றில் 500-க்கும் அதிகமான ரன்கள் குவித்தால், உங்களது நாட்டுக்காக நீங்கள் விளையாடலாம். ஒவ்வொரு ஐபிஎல் சீசனும் வீரர்களுக்கு அவர்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பு. ஐபிஎல் தொடரின் மூலம் வீரர்கள் எந்த ஒரு அச்சமுமின்றி விளையாடி அவர்களது திறமையை வெளிக்காட்டலாம் என்றார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஒருவராக சுரேஷ் ரெய்னா உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ரெய்னா 5-வது இடத்தில் உள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் 205 போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா 5,528 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 39 அரைசதங்கள் அடங்கும். ஐபிஎல் தொடரில் பலமுறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: பயணிகள் அவதி!

தமிழக காவலர்கள் மீது கல்வீச்சு: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை!

மேட்டூர் அணை நீர்மட்டம் 2-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

புதிய பதவி காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

SCROLL FOR NEXT