ஜெமிமா ரோட்ரிக்ஸ் படம் | ஜெமிமா ரோட்ரிக்ஸ் (இன்ஸ்டாகிராம்)
ஒலிம்பிக்ஸ்

இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் புகழாரம்!

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்,வீராங்கனைகள் உறுதியோடு போராடியதாக அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் புகழாரம்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர், வீராங்கனைகள் உறுதியோடு போராடியதாக அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த ஜூலை 26 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. பாரீஸ் ஒலிம்பிக்கில் ஒரு வெள்ளிப் பதக்கம், 5 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 6 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்,வீராங்கனைகள் உறுதியோடு போராடியதாக அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: இந்திய அணியின் ஒலிம்பிக் போட்டிக்கான ஜெர்சியை அணிந்திருப்பது மிகவும் பிடித்திருக்கிறது. ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதை ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பெருமையான தருணமாக இருக்கும். நமது இந்திய வீரர், வீராங்கனைகள் பாரீஸ் ஒலிம்பிக்கில் மிகுந்த அர்ப்பணிப்போடும், விடாமுயற்சியோடும் உறுதியாக போட்டியிட்டனர். வெற்றியோ, தோல்வியோ உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிலிப்பின்ஸ் கேல்மெகி புயல் - தேசிய பேரிடராக அறிவிப்பு!

'கர்ப்பமாக்கினால் பணம்'- நூதன மோசடியில் 11லட்சம் இழந்த புணேவைச் சேர்ந்த ஒருவர்! | Cyber awareness

சுற்றுலா செல்லத் திட்டமா? SCAM-களில் சிக்கிடாதீங்க! நூதன டிக்கெட் மோசடிகள்!

பிகார் பேரவைத் தேர்தல்: 64.46% வாக்குகள் பதிவு!

ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் சுற்றுப்பயணம்!

SCROLL FOR NEXT