இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் மிகப்பெரிய வரலாறு கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 
இதன்மூலம் எட்பாஸ்டனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய நிலையில் எதிரணி வெற்றிபெறுவது இதுவே முதன்முறையாகும். இதுபோன்று இந்த ஆட்டத்தின் மூலம் பல புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அவற்றின் விவரம் பின்வருமாறு: 
முதல் இன்னிங்ஸில் 90-க்கும் மேற்பட்ட ரன்கள் பின்தங்கிய நிலையில் மிகப்பெரிய வெற்றிபெற்ற அணிகள்:
- 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 251 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி, எட்பாஸ்டன் 2019
 - 126 ரன்கள் பின்தங்கிய நிலையில் 233 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வெற்றி, ஜொஹன்னஸ்பர்க் 1699/67
 - 161 ரன்கள் பின்தங்கிய நிலையில் 197 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி, காலே 2003/04
 - 135 ரன்கள் பின்தங்கிய நிலையில் 193 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கைக்கு எதிராக நியூஸிலாந்து வெற்றி, வெல்லிங்டன் 2014/15
 
முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா பெற்ற வெற்றிகள்:
- 38 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஓவலில் 1882-ல் வெற்றி
 - 38 ரன்கள் பின்தங்கிய நிலையில் லீட்ஸில் 1948-ல் வெற்றி
 - 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் மான்சஸ்டரில் 1961-ல் வெற்றி
 - 6 ரன்கள் பின்தங்கிய நிலையில் ட்ரெண்ட் பிரிட்ஜில் 1981-ல் வெற்றி
 - 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் எட்பாஸ்டனில் 2019-ல் வெற்றி
 
90-க்கும் மேற்பட்ட ரன்கள் முன்னிலைப் பெற்று இங்கிலாந்து அடைந்த தோல்விகள்:
- 1961-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 177 ரன்கள் முன்னிலைப் பெற்று தோல்வி
 - 1966-ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 90 ரன்கள் முன்னிலைப் பெற்று தோல்வி
 - 2014-ல் இலங்கைக்கு எதிராக 108 ரன்கள் முன்னிலைப் பெற்று தோல்வி
 - 2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 90 ரன்கள் முன்னிலைப் பெற்று தோல்வி
 
100 ஆண்டுகால ஆஷஸ் தொடர் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் பேட் செய்த அணி 122 ரன்களுக்கும் குறைவாக 8 விக்கெட்டுகளை இழந்தும் வெற்றிபெற்ற தருணம் 3 முறை நிகழ்ந்துள்ளது.
- 99/8 இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, சிட்னி, 1954/55
 - 98/8 இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, சிட்னி, 1978/79
 - 122/8 ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, எட்பாஸ்டன், 2019
 
எட்பாஸ்டனில் ஒரு பெற்ற மிகப்பெரிய வெற்றிகள்:
- 256 இங்கிலாந்து vs மேற்கிந்திய தீவுகள் 2004
 - 251 ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து 2019
 - 217 இங்கிலாந்து vs மேற்கிந்திய தீவுகள் 1963
 - 205 இங்கிலாந்து vs நியூஸிலாந்து 1958
 - 141 இங்கிலாந்து vs பாகிஸ்தான் 2016
 
குறைந்த டெஸ்ட்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸி. வேகங்கள்:
- 17 சார்லி டர்னர்
 - 20 பில்ல ஓ ரைலி
 - 21 ஸ்டூவர்ட் மெக்கல்/ பேட் கம்மின்ஸ்
 - 22 ஜான்ஸ்டன்/ டென்னிஸ் லில்லி/ ஜெஃப் தாம்ஸன்
 - 23 ஜி மெக்கன்ஸி/ க்ளென் மெக்ராத்/ மிட்செல் ஜான்ஸன்
 
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸி. பந்துவீச்சாளர்கள்:
- 708 ஷேன் வார்னே
 - 563 க்ளென் மெக்ராத்
 - 355 டென்னிஸ் லில்லி
 - 350 நாதன் லயன்
 
ஒரு டெஸ்ட் போட்டியின் 5 நாட்களிலும் பேட் செய்த வீரர்கள்:
- எம்.எல்.ஜெய்சிம்ஹா v ஆஸ்திரேலியா 1960
 - ஜெஃப்ரி பாய்காட் v ஆஸ்திரேலியா 1977
 - கே. ஹியூக்ஸ் v இங்கிலாந்து 1980
 - ஆலன் லாம்ப் v மேற்கிந்திய தீவுகள் 1984
 - ரவி சாஸ்திரி v இங்கிலாந்து 1984
 - ஏ.க்ரிஃப்ஃபித் v நியூஸிலாந்து 1999
 - ஆன்ட்ரூ ப்ளின்டாஃப் v இந்தியா 2006
 - ஏ.பீட்டர்ஸன் v நியூஸிலாந்து 2012
 - புஜாரா v இலங்கை 2017
 - ராரி பர்ன்ஸ் v ஆஸ்திரேலியா 2019
 
ஒரு டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் குவித்த அதிக ரன்கள்:
- 286 (144|142) v இங்கிலாந்து, எட்பாஸ்டன் 2019
 - 273 (215|58) v இங்கிலாந்து, லார்ட்ஸ் 2015
 - 252 (199|54*) v மேற்கிந்திய தீவுகள், கிங்ஸ்டன் 2015
 - 239 (239|DNB) v இங்கிலாந்து, பெர்த் 2017
 - 214 (162*|52*)v இந்தியா, அடிலெய்ட் 2014
 
ஆஷஸ் தொடரில் அதிக சதமடித்த பேட்ஸ்மேன்கள்:
- 19 டான் பிராட்மேன்
 - 12 ஜேக் ஹாப்ஸ்
 - 10 ஸ்டீவ் வாஹ்/ ஸ்டீவ் ஸ்மித்
 - 09 வாலி ஹாமன்ட்/ டேவிட் காவர்
 
டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 25 சதமடித்த பேட்ஸ்மேன்கள்:
- 68 டான் பிராட்மேன்
 - 119 ஸ்டீவ் ஸ்மித்
 - 127 விராட் கோலி
 - 130 சச்சின் டெண்டுல்கர்
 - 138 சுனில் கவாஸ்கர்
 - 139 மேத்யூ ஹேடன்
 - 147 கேரி சோபர்ஸ்
 
ஆஷஸ் டெஸ்டின் இரு இன்னிங்ஸிலும் சதமடித்த பேட்ஸ்மேன்கள்:
- வாரன் பார்ட்ஸ்லே (1909)
 - ஹேர்பர்ட் சக்லிஃபே (1925)
 - வாலி ஹாமன்ட் (1929)
 - டென்னிஸ் காம்டன் (1947)
 - ஆர்தர் மாரிஸ் (1947)
 - ஸ்டீவ் வாஹ் (1997)
 - மேத்யூ ஹேடன் (2002)
 - ஸ்டீவ் ஸ்மித் (2019)
 
ஆஷஸ் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் கடைசி 6 இன்னிங்ஸ்களில் குவித்த ரன்கள்:
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அதிகமுறை அரைசதம் கண்டவர்கள்:
- 6 மைக்கெல் ஹஸ்ஸி (2009-10)
 - 6 ஸ்டீவ் ஸ்மித் (2017-19)
 - 5 பி. மே (1955-56)
 - 5 ஜே. எட்ரிச் (1968)
 - 5 கிராம் கூச் (1990-91)
 - 5 மைக்கெல் ஹஸ்ஸி (2006)
 
முதல் ஆஷஸ் இன்னிங்ஸில் சதமடித்த இங்கிலாந்து வீரர்கள்:
- 287 டிப் ஃபாஸ்டர், சிட்னி 1903
 - 119 ஜார்ஜ் கன், சிட்னி 1907
 - 137 மாரிஸ் லேலாண்ட், மெல்போர்ன் 1929
 - 173 கே.எஸ்.துலீப்சின்ஹ்ஜி, லார்ட்ஸ் 1930
 - 102 ஐ.ஏ.கே. பட்டோடி, சிட்னி 1932
 - 100 லென் ஹட்டன், டிரென்ட் பிரிட்ஜ் 1938
 - 102 டென்னிஸ் காம்ப்டன், ட்ரென்ட் பிரிட்ஜ் 1938
 - 120 ஜான் எட்ரிச், லார்ட்ஸ் 1964
 - 175 டிம் ராபின்ஸன், லீட்ஸ் 1985
 - 133 ராரி பர்ன்ஸ், எட்பாஸ்டன் 2019