சென்னை டெஸ்ட்: இந்தியா உணவு இடைவேளையின் போது 173/1
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று, உணவு இடைவேளையின் போது இந்தியா தனது முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று, உணவு இடைவேளையின் போது இந்தியா தனது முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்று பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி , தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்கள் எடுத்து.
பின்னர் நேற்று தந்து முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது. துவக்க ஆட்டக்காரர்கள் பார்த்திவ் படேல் 28 ரன்களுடனும், ராகுல் 30 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று இன்று இந்தியா தனது ஆட்டத்தை தொடர்நது. சிறப்பாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும், அரைசதம் அடித்தனர். நன்கு விளையாடி வந்த பார்திவ் படேல் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொயீன் அலி பந்துவீச்சில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
பின்னர் களமிறங்கிய புஜாரா நிதானமாக ஆடி வருகிறார். உணவு இடைவேளையின் போது, இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 89 ரன்களுடனும், புஜாரா 11 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.