'நல்லா ஒடுங்க' : டிவிட்டரில் யுவராஜ், கம்பீர் 'கலகல'!
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீர கவுதம் காம்பிர் வெள்ளியன்று தனது தனது 35-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
செய்திகள்'நல்லா ஒடுங்க' : டிவிட்டரில் யுவராஜ், கம்பீர் 'கலகல'!
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீர கவுதம் காம்பிர் வெள்ளியன்று தனது தனது 35-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீர கவுதம் காம்பிர் வெள்ளியன்று தனது தனது 35-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு சேவாக், யுவராஜ் உள்ளிட்ட வீரர்கள் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.
ட்விட்டரில் யுவராஜ் சிங் கம்பீருக்கு கூறிய வாழ்த்தில், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் மிஸ்டர் கவுதம் கம்பீர். விக்கெட்டுகளுக்கு இடையே ரன்கள் ஓடும்போது கடவுள் உங்களுக்கு ஆசி வழங்கட்டும்.தொடர்ந்து செயல்படுங்கள்” என்று கலாய்த்து பதிவிட்டிருந்தார்.
இதற்கு டிவிட்டரிலேயே பதிலளித்த கம்பீர், “நன்றி ப்ரோ. எப்போதும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது, எனவே இப்போதிலிருந்தே சமையலறைக்கும் படுக்கையறைக்கும் ஓடி ஓடி பழகுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இருவரின் பரஸ்பர கலாய்ப்பால் டிவிட்டர் கலகலப்பாக இருந்தது