முகப்பு
செய்திகள்

சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர்!

பிரபல கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் இன்று காலை, உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்து, தன்னை சமாஜ்வாதி கட்சியில் இணைத்துக் கொண்டார்.

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

பிரபல கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் இன்று காலை, உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்து, தன்னை சமாஜ்வாதி கட்சியில் இணைத்துக் கொண்டார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். பிரபல கிரிகெட் வீரரான இவர் முதலில் உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் அணிக்காக போட்டிகளில் விளையாடி வந்தார். அப்படியே முன்னேறி இந்திய அணியில் இடம்பிடித்தார்.

இந்திய அணிக்காக ஆறு டெஸ்ட் போட்டிகள்  மற்றும், 68 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் முறையே 27 மற்றும் 67 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இன்று காலை லக்னோவில் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை 'திடீரென்று' சந்தித்த பின்பு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது:

நான் தற்பொழுது முதல்வரை சந்தித்தேன். சமாஜ்வாதி கட்சியில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். கட்சியின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற விஷயங்களை செய்வேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விளையாட்டுத் துறைக்கு அகிலேஷ் நிறைய உதவிகள் செய்துள்ளதாக குறிப்பிட்ட அவரிடம், வரயிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, 'அரசியலில் நான் ஒரு குழந்தை; இப்போதுதான் க ற்றுக் கொண்டிருக்கிறேன்' என்று தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →