முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலியாவை இந்தியா 'ஒயிட் வாஷ்' செய்தாலும் ஆச்சர்யம் இல்லை: கங்குலி 

நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இம்மாத இறுதியில் வர உள்ள ஆஸ்திரேலிய அணியை இந்தியா 'ஒயிட் வாஷ்' செய்தாலும் ...

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:59 AM
பகிர்:

மும்பை: நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இம்மாத இறுதியில் வர உள்ள ஆஸ்திரேலிய அணியை இந்தியா 'ஒயிட் வாஷ்' செய்தாலும் ஆச்சர்யம் இல்லை என்று முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இருங்களிடையேயான முதல் டெஸ்ட் பிப்ரவரி 23-ந்தேதி புனேவில் தொடங்குகிறது.

மும்பையில் விளம்பரதாரர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற  இந்திய அணியில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்த தொடர் குறித்து  கூறுகையில் ‘‘இந்திய தொடர் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. ஆஸ்திரேலியா 0-4 என ஒயிட்வாஷ் ஆனால் கூட நான் கண்டிப்பாக அதிர்ச்சியடைய மாட்டேன்.

கடந்த 25 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் சுழற்பந்த வீச்சு மூலம் ஆதிக்கம் செலுத்து வருகிறது. என்னுடைய காலத்தில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். தற்போது அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் உள்ளனர்.

அதேநேரம் அமித் மிஸ்ரா அணியில் இடம் பிடித்தால் அவரால் வெற்றியை தேடித்தர முடியும். யுவேந்திர சாஹலுக்கு, ஜயந்த் ஜாதவுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அவர்களாலும் வெற்றியை தேடித்தர முடியும்.

இந்தியாவைப் பொறுத்த வரை வெளிநாட்டு அணிகளின்பேட்ஸ்மமேன்கள் சிறப்பாக சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடினால் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →