செய்திகள்

எல். பாலாஜிக்கு ரூ. 50 லட்சம் வழங்கிய பிசிசிஐ!

DIN

இந்திய அணிக்காக விளையாடிய லட்சுமிபதி பாலாஜிக்கு பிசிசிஐ ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளது. 

இந்திய அணிக்காக 2003- 04ஆம் ஆண்டுக்கு முன்பு விளையாடத் தொடங்கிய முன்னாள் வீரர்களுக்கு பிசிசிஐ நிதியுதவி செய்துவருகிறது. பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசனால் 2012-ல் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. குறைந்தபட்சம் 10 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள முன்னாள் வீரர்களுக்கு இத்திட்டத்தால் பலன் கிடைக்கும். இதையடுத்து எட்டு டெஸ்டுகள், 30 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பாலாஜிக்கு ரூ. 50 லட்சத்தை வழங்கியுள்ளது பிசிசிஐ.

என் கோரிக்கையை பிசிசிஐக்கு அனுப்பிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு நன்றி. கோரிக்கை வைத்த ஒரு மாதத்துக்குள் எனக்குப் பணம் கிடைத்துவிட்டது என்று பாலாஜி கூறியுள்ளார். பாலாஜி, தமிழ்நாடு ரஞ்சி அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தற்போது பணியாற்றி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT