முகப்பு
செய்திகள்

ரஞ்சி ஆட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம்: அஸ்வின், இஷாந்த் சர்மாவுக்கு பிசிசிஐ கட்டளை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் ரஞ்சி ஆட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது...

Updated On : 19 நவம்பர், 2018 at 10:55 AM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் ரஞ்சி ஆட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது என்று பிசிசிஐ கட்டளை பிறப்பித்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள, ஆஸ்திரேலியா அல்லது நியூஸிலாந்துக்கு முன்பே செல்லாத வீரர்கள் வரும் நவம்பர் 24 அன்று ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பிச் செல்லவுள்ளார்கள். இதனால் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் ரஞ்சி ஆட்டங்களில் இனி கலந்துகொள்ளக்கூடாது என பிசிசிஐ கூறியுள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் சங்கங்களுக்குக் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முகமது ஷமி மட்டும் நாளை தொடங்கவுள்ள கேரளாவுக்கு எதிரான  ரஞ்சி ஆட்டத்தில் கலந்துகொள்ளலாம், அதுவும் அவர் ஒரு இன்னிங்ஸில் 15 ஓவர்களுக்கு மேல் வீசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் நவம்பர் 28 அன்று தொடங்கவுள்ளது. டிசம்பர் 6 அன்று டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.