முகப்பு
செய்திகள்

அரையிறுதியை முன்னிட்டு கவனிக்க வேண்டிய 3 முக்கிய குறிப்புகள்

இந்தியா, நியூஸிலாந்து இடையிலான 2019 உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 9 ஜூலை, 2019 at 1:51 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 2:59 PM

இந்தியா, நியூஸிலாந்து இடையிலான 2019 உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் அணி எது என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையே 3 முக்கிய குறிப்புகள் கவனிக்கத்தக்கவையாக அமைந்துள்ளன. அவை பின்வருமாறு:

நியூஸிலாந்து அணி இதுவரை 7 முறை உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. ஆனால், அதில் ஒருமுறை மட்டுமே வெற்றிபெற்று இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது. ஆனால், இந்திய அணி இதுவரை 6 முறை அரையிறுதிக்கு தகுதிபெற்றதில் 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அவற்றில் 2 முறை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கடந்த உலகக் கோப்பை முதல் பவர் ப்ளேயின் போது ரோஹித் ஷர்மாவின் ஸ்டிரைக் ரேட் 74.04 ஆக மட்டுமே இருந்து வந்தது. ஆனால், நடப்பு உலகக் கோப்பையில் குறிப்பாக ஷிகர் தவன் விலகலுக்குப் பின் ரோஹித் ஷர்மாவின் ஸ்டிரைக் ரேட் 95.77 ஆக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

2015 உலகக் கோப்பை முதல் நடைபெற்ற போட்டிகளில் நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் மட்டுமே இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மொத்தம் 12 ஆட்டங்களில் 22 விக்கெட்டுகளைக் குவித்துள்ளார். இதன் பந்துவீச்சு சராசரி 24.9 ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.