முகப்பு
செய்திகள்

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அதிகப் பங்களிப்பு: கவுன்டி கிரிக்கெட்டில் அசத்தி வரும் அஸ்வின்!

இதுவரை நாட்டிங்கம்ஷைர் அணிக்காக அஸ்வின் 3 ஆட்டங்களில் விளையாடி 23 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:33 AM
பகிர்:

இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஆர். அஸ்வின், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார்.

இதற்கு முன்பு 2017-ல் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடிய அஸ்வின், இந்தமுறை நாட்டிங்கம்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். 

டிரெண்ட்பிரிட்ஜில் சர்ரே அணிக்கு எதிராக விளையாடிய அஸ்வின், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தியும் அவருடைய நாட்டிங்கம்ஷைர் அணி இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. 

இந்த ஆட்டத்தில் அஸ்வினின் பங்களிப்பு:

சர்ரே முதல் இன்னிங்ஸ் - 6/69 
நாட்டிங்கம்ஷைர் முதல் இன்னிங்ஸ் - 27 (அதிக ரன்கள்)
சர்ரே முதல் இன்னிங்ஸ் - 6/75 
நாட்டிங்கம்ஷைர் முதல் இன்னிங்ஸ் - 66* (அதிக ரன்கள்)

இதுவரை நாட்டிங்கம்ஷைர் அணிக்காக அஸ்வின் 3 ஆட்டங்களில் விளையாடி 23 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எனினும் அவருடைய அணி ஓர் ஆட்டத்திலும் ஜெயிக்கவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →