செய்திகள்

மே.இ. தீவுகள் ஏ அணிக்கு எதிரான ஆட்டம்: இந்திய ஏ அணியின் சரிவைத் தடுத்து நிறுத்திய ஷிவம் டுபே & சஹா!

மே.இ. தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய ஏ அணிக்கு ஏற்பட்ட சரிவைத் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்...

எழில்

மே.இ. தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய ஏ அணிக்கு ஏற்பட்ட சரிவைத் தடுத்து நிறுத்தியுள்ளார்கள் ஷிவம் டுபேவும் சஹாவும். 

நார்த் சவுண்டில் நடைபெற்றும் வரும் இந்த ஆட்டத்தில் மே.இ. தீவுகள் ஏ அணி முதல் இன்னிங்ஸில் 228 ரன்கள் எடுத்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய ஏ அணி, 168 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி முன்னிலை பெறுமா என்கிற கேள்வி எழுந்தது.

ஆனால் 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் சஹாவும் ஷிவம் டுபேவும் சிறப்பாக விளையாடி சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். இந்திய ஏ அணியின் ஸ்கோர் 292 ரன்களாக உயர்ந்தபோது 71 ரன்களில் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஷிவம் டுபே. சஹா 61 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

2-ம் நாளின் முடிவில் இந்திய ஏ அணி, 99 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அந்த அணி 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 71 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT