முகப்பு
செய்திகள்

ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடர்: இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு மாற்றம்! காரணம் என்ன?

இலங்கையில்  ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் போட்டியிடுவதாக இருந்த ஒருநாள் தொடர்...

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இலங்கையில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதாக இருந்தன. செப்டம்பர் 3 முதல் ஒருநாள் ஆட்டங்கள் ஹம்பன்டோட்டாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக இந்தத் தொடர் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்தது. எனினும் ஒருநாள் தொடர் நிச்சயம் நடைபெறும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹமித் ஷின்வாரி தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கையில்  ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் போட்டியிடுவதாக இருந்த ஒருநாள் தொடர் தற்போது பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் இலங்கைக்குச் சென்று வருவதில் உள்ள பயணச் சிக்கல்களாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் செப்டம்பர் 3 முதல் ஒருநாள் தொடர் தொடங்கவுள்ளது. எங்கு நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். இடமாற்றம் காரணமாக சாலை வழியாகவே ஆப்கானிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தானுக்குத் தற்போது சென்று விடுவார்கள்.
 

முழு கட்டுரையைப் படிக்க →