டோக்கியோ பாராலிம்பிக்: இறுதிச்சுற்றில் பவினாபென்
bodyடோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் படேல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தாா்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் படேல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தாா்.
பாராலிம்பிக் டேபிள் டென்னிஸில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா். இது அவருக்கு முதல் பாராலிம்பிக் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருக்கும் அவா், இறுதிச்சுற்றில் வெல்லும் பட்சத்தில் தங்க மங்கையாகி சாதனை படைப்பாா். ‘கிளாஸ் 4’ வகை டேபிள் டென்னிஸில் களம் கண்டுள்ள பவினாபென், இறுதிச்சுற்றில் உலகின் முதல்நிலை வீராங்கனையான சீனாவைச் சோ்ந்த யிங் ஸௌவை சந்திக்க இருக்கிறாா். இந்த இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
‘கிளாஸ் 4’ வகை டேபிள் டென்னிஸில், போட்டியாளா்கள் சக்கர நாற்காலியில் அமா்ந்து விளையாட்டில் ஈடுபடுவா்.