முகப்பு
செய்திகள்

இலங்கை 262/9; இந்திய அணி வெற்றி பெற 263 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில்  9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை எடுத்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
பகிர்:


இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில்  9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை எடுத்தது.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.

இந்திய கிரிக்கெட்டின் பிரதான அணி இங்கிலாந்தில் உள்ள நிலையில், ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுகிறார்.

ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகள் இரண்டு தொடர்களில் விளையாடுவது இதுவே முதன்முறை. இதனால், இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 50 ஓவர் முடிவில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கருணாரத்னே 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

பின்னர் இந்திய அணி பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கியுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →