முகப்பு
செய்திகள்

டாஸில் பலமுறை தோற்றாலும் சாதித்துக் காண்பித்த இந்திய அணி!

இந்த 22 ஆட்டங்களிலும் இந்திய அணி 6 டாஸ்களில் மட்டுமே வென்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
பகிர்:

கிரிக்கெட்டில் டாஸில் வெல்லும் அணி, அந்த ஆட்டத்தை வெல்வதற்கான முதல் அடியை எடுத்துவைக்கும் எனக் கூறலாம்.

ஆடுகளத்தின் தன்மை பலமுறை டாஸில் வெல்லும் அணிக்குச் சாதகமாக அமையும். அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் டாஸில் தோற்கும் அணி உடனடியாகப் பின்னடைவைச் சந்திக்கும். இதனாலேயே டெஸ்டில் மட்டும் வெளிநாட்டு அணிக்கு டாஸில் முன்னுரிமை அளிக்க வேண்டும், பேட்டிங் அல்லது ஃபீல்டிங் குறித்து அவர்கள் முடிவெடுக்க வேண்டும் எனப் பலரும் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்கள்.

ஐபிஎல் 2020 போட்டி முடிந்த பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களிலும் நான்கு டெஸ்டுகளிலும் விளையாடியது. இதன்பிறகு சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒருநாள், ஐந்து டி20 ஆட்டங்களிலும் நான்கு டெஸ்டுகளிலும் விளையாடியது.

இந்த 22 ஆட்டங்களிலும் இந்திய அணி 6 டாஸ்களில் மட்டுமே வென்றது. ஆனால் விளையாடிய ஆறு தொடர்களில் ஐந்தில் வெற்றியடைந்தது. 22 ஆட்டங்களில் 13-ல் வெற்றி கிடைத்தது.

இதனால் ஓர் அணி அதிக வெற்றிகளை அடைய டாஸ் ஒரு பொருட்டே இல்லை என்பதை இந்திய அணி நிரூபித்துள்ளது. மிகச்சிறந்த அணியால் மட்டுமே டாஸ் முடிவைத் தாண்டியும் ஆட்டத்தில் வெற்றியை நிலைநாட்ட முடியும். இந்திய அணி இதைச் சாதித்துள்ளது. 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்

ஒருநாள் தொடர் - இந்தியா தோல்வி, 1-2
டி20 தொடர் - இந்தியா வெற்றி, 2-1
டெஸ்ட் தொடர் - இந்தியா வெற்றி, 2-1

இங்கிலாந்து தொடர்

டெஸ்ட் தொடர் - இந்தியா வெற்றி, 3-1
டி20 தொடர் - இந்தியா வெற்றி, 3-2
ஒருநாள் தொடர் - இந்தியா வெற்றி 2-1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.