செய்திகள்

வெளிநாட்டில் பயிற்சி: கேரளக் கால்பந்து வீரருக்கு நிதியுதவி செய்த சஞ்சு சாம்சன்

DIN

இளம் கால்பந்து வீரரின் வெளிநாட்டுப் பயிற்சிக்காக நிதியுதவி செய்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்.

கேரளத்தைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரரான ஆதர்ஷ், ஸ்பெயினில் 5-வது டிவிஷன் பிரிவில் கால்பந்துப் பயிற்சி பெறுவதற்காக ஸ்பெயினுக்குச் செல்லவுள்ளார். ஒரு மாதப் பயிற்சியில் அவரால் 5 ஆட்டங்களில் விளையாட முடியும். அவருடைய திறமை அங்கீகரிக்கப்பட்டால் ஸ்பெயின் கிளப்புகளில் தேர்வாகவும் வாய்ப்புண்டு. எனினும் ஸ்பெயினுக்குச் சென்று பயிற்சி எடுக்கு  அளவுக்கு நிதி வசதி இல்லாததால் கேரள அமைச்சர் சாஜி செரியனிடம் உதவி கோரினார் ஆதர்ஷ். இதனால் அவருடைய நிலைமை மற்றவர்களுக்குத் தெரிய வந்தது. 

கேரளாவின் திருவல்லாவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஆதர்ஷுக்குத் தற்போது பலரும் நிதியுதவி செய்துள்ளார்கள். தனியார் கிளப் ஒன்று ரூ. 50,000 அளித்த நிலையில் கேரள அமைச்சர் சாஜி செரியனும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக ஆதர்ஷுக்கு நிதியுதவி செய்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனும் தன் பங்குக்கு ஆதர்ஷுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். ஸ்பெயின் செல்வதற்கான விமான டிக்கெட் செலவை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். பலரும் உதவி செய்துள்ளதால் விரைவில் மேட்ரிட் செல்லவுள்ளார் ஆதர்ஷ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT