செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: பிரபல நியூசி. வீரர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல நியூசி. வீரர் கைல் ஜேமிசன் விலகியுள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல நியூசி. வீரர் கைல் ஜேமிசன் விலகியுள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது.

டி20, டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான டி20 அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். கோலி, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் சஹால் மீண்டும் தேர்வாகியுள்ளார்.

கடந்த ஞாயிறன்று துபையில் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய நியூசிலாந்து அணி, அடுத்த 3-வது நாளில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக டி20 தொடரிலிருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகினார். இதனால் முதல் டி20 ஆட்டத்தில் செளதி தலைமையில் நியூசிலாந்து டி20 அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது. 

இந்நிலையில் கேன் வில்லியம்சனுக்கு அடுத்ததாக பிரபல வீரர் கைல் ஜேமிசனும் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை அவர் எடுத்துள்ளதாக நியூசி. பயிற்சியாளர் கேரி ஸ்டட் கூறியுள்ளார். காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகிய லாகி பர்குசன், ஜெய்ப்பூர் டி20 ஆட்டத்தில் விளையாடுவதற்கான உடற்தகுதியை அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

26 வயது கைல் ஜேமிசன், 8 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்நாடகத்தில் மிதமான நிலநடுக்கம்!

கனவுகளுக்காக போராடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கதை | Women Cricket World Cup

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT