செய்திகள்

ஆம்ப்ரோஸ் மீது எவ்வித மரியாதையும் இல்லை: கிறிஸ் கெயில் சாடல்

DIN

தன்னை விமர்சனம் செய்த முன்னாள் வீரர் ஆம்ப்ரோஸுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் பிரபல வீரர் கிறிஸ் கெயில்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான மே.இ. தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் இடம்பெற்றுள்ளார். எனினும் சமீபகாலமாக அவர் சரியாக விளையாடாததால் மே.இ. அணியில் அவருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என முன்னாள் வீரர் ஆம்ப்ரோஸ் கூறினார். இந்த வருடம் கெயில் விளையாடிய 16 சர்வதேச டி20 ஆட்டங்களில் ஒரு அரை சதத்துடன் 227 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 17.46. ஸ்டிரைக் ரேட் - 117.61.

ஆம்ப்ரோஸின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பேட்டியில் கெயில் கூறியதாவது:

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குள் நான் நுழைந்தபோது ஆம்ப்ரோஸ் மீது அதிக மரியாதை வைத்திருந்தேன். என்னைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார் ஆம்ப்ரோஸ். கவனத்துக்காகச் செய்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால் அவருக்குக் கவனம் கிடைக்கிறது. அதனால் அவர் ஆசைப்படும் கவனத்தை நானும் திருப்பித் தருகிறேன். ஆம்ப்ரோஸ் மீது எனக்கு எவ்வித மரியாதையும் கிடையாது. எப்போது நான் அவரைப் பார்த்தாலும் அணியைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவதை நிறுத்தவும், அணிக்கு ஆதரவு கொடுங்கள் எனக் கூறுவேன். மற்ற அணிகளில் முன்னாள் வீரர்கள் அவர்களுடைய அணிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதேபோல டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டியில் எங்களுக்கு ஏன் முன்னாள் வீரர்கள் ஆதரவளிக்கக் கூடாது? டி20 உலகக் கோப்பையை இருமுறை வென்றுள்ளோம். இந்தமுறை கோப்பையைத் தக்கவைக்க முயல்கிறோம். முன்னாள் வீரர்களின் எந்தக் கருத்துகளையும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT