நியூசிலாந்து தொடருக்குப் பயிற்சியாளராகும் ராகுல் டிராவிட்
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாடுகிறது...
நவம்பர் மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாடுகிறது.
டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று முடிந்த மூன்று நாள்கள் கழித்து இந்தியாவில் நவம்பர் 17-ல் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 25 அன்று தொடங்குகிறது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக ரவி சாஸ்திரி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து புதிய பயிற்சியாளரைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது பிசிசிஐ.
முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய ஜூனியர், இந்திய ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்தார். 2019-ல் பெங்களூரில் உள்ள பிசிசிஐயின் நேஷனல் கிரிக்கெட் அகாதமியின் (என்.சி.ஏ.) தலைவராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் இலங்கைக்குச் சென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டார். முழு நேரப் பயிற்சியாளராகப் பணியாற்ற அவருக்குத் தயக்கம் இருப்பதால் நியூசிலாந்து தொடருக்கு மட்டும் டிராவிடை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்குப் பிறகு முழு நேரப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Article
என்னுடைய டி20 அணியில் அஸ்வினுக்கு இடமில்லை: மஞ்ச்ரேக்கர் விமர்சனம்
கடைசி ஓவரில் அஸ்வின் செய்த தவறு: கவாஸ்கர்
ஐபிஎல் இறுதிச்சுற்றில் ரஸ்ஸல் விளையாடுவாரா?
இந்திய வீராங்கனைகளை வரவேற்கும் மகளிர் பிக் பாஷ் லீக் போட்டி
வெங்கடேஷ் ஐயர் இந்தியாவுக்காக விளையாடுவார்: ரிக்கி பாண்டிங் கணிப்பு
ஐபிஎல்: விதிமுறையை மீறிய தினேஷ் கார்த்திக்