செய்திகள்

கர்ப்பம்: அறிவித்தார் மரியா ஷரபோவா

அலெக்ஸாண்டர் கைக்ஸைக் காதலித்து வரும் ஷரபோவா, தனது 35-வது பிறந்த நாளன்று...

DIN

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தன்னுடைய ரசிகர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரும் பிரபல டென்னிஸ் வீராங்கனையுமான ரஷியாவைச் சேர்ந்த மரியா ஷரபோவா, சா்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 32. நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற 10 வீராங்கனைகளில் ஷரபோவாவும் ஒருவர். டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் 21 வாரங்கள் இருந்தார்.  2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் மகளிர் ஒற்றையர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

அலெக்ஸாண்டர் கைக்ஸைக் காதலித்து வரும் ஷரபோவா, தனது 35-வது பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது முதல் குழந்தையை விரைவில் எதிர்பார்ப்பதாகக் கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து தொழிலதிபரான கைக்ஸும் ஷரபோவாவும் 2018 முதல் காதலித்து வருகிறார்கள். கடந்த வருட டிசம்பரில் தங்களுடைய திருமண நிச்சயதார்த்தம் பற்றி இருவரும் அறிவித்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT