செய்திகள்

காமன்வெல்த் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் இரு இந்தியர்கள்

ஆடவர் குத்துச்சண்டைப் பிரிவில் அமித் பங்காலும் மகளிர் பிரிவில் நிது கங்காஸூம் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்.

DIN

காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் குத்துச்சண்டைப் பிரிவில் அமித் பங்காலும் மகளிர் பிரிவில் நிது கங்காஸூம் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்.

பிர்மிங்கம் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் ஸாம்பியாவின் பேட்ரிக் சின்யெம்பாவை எதிர்கொண்டார் இந்தியாவின் அமித் பங்கால். தொடக்கத்தில் கடுமையான சவாலாக அமைந்த இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற அமித் பங்கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 2018 காமன்வெல்த் போட்டிகளில் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

அதேபோல மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிது கங்காஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்றைய போட்டியில் கனடாவின் பிரியங்கா தில்லானைத் தோற்கடித்தார். இறுதிச்சுற்றில் இங்கிலாந்தின் டெமி ஜேட் ரெஸ்தானை நிது கங்காஸ் எதிர்கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

வந்தாளே அல்லிப்பூ... சிம்ரன் கௌர்!

ரிசர்வ் வங்கியின் கொள்கை நாளில் சரிவை கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

சிராஜிக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

SCROLL FOR NEXT