செய்திகள்

காமன்வெல்த் அரையிறுதி: மந்தனா அதிரடியால் 164 ரன்கள் எடுத்த இந்திய மகளிர் அணி

DIN

காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. 

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து அசத்தினார். பவர்பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் குவித்தது. 23 பந்துகளில் அரை சதம் எடுத்தார் மந்தனா. இந்திய மகளிர் டி20 கிரிகெட்டில் இது விரைவான அரை சதம். இதற்கு முன்பு 24 பந்துகளில் அரை சதம் எடுத்து சாதனை படைத்திருந்தார் மந்தனா. ஜெமிமா ரோட்ரிகஸ் 31 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT