இந்திய பி அணி 
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவு: இந்திய பி அணிக்கு வெண்கலம்

ஜெர்மனியை 3-1 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

DIN

சென்னை செஸ் ஒலிம்பியாடில் ஓபன் பிரிவில் ஜெர்மனியை 3-1 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வெல்ல கடுமையான போட்டி நடைபெற்றது.

நேற்றைய ஆட்டங்களின் முடிவில் ஓபன் பிரிவில் தலா 17 புள்ளிகளுடன் உஸ்பெகிஸ்தான், அர்மீனியா ஆகிய அணிகள் முதல் இரு இடங்களைப் பிடித்தன. இந்தியா பி, இந்தியா ஏ, அமெரிக்கா ஆகிய அணிகள் தலா 16 புள்ளிகளுடன் 3,4,5 இடங்களை முறையே பிடித்தன.

இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் இந்தியா பி அணி ஜெர்மனியையும் இந்தியா ஏ அணி பிரபல வீரர்களைக் கொண்ட அமெரிக்காவையும் எதிர்கொண்டன. உஸ்பெகிஸ்தான் நெதர்லாந்தையும் அர்மீனியா ஸ்பெயினையும் எதிர்கொண்டன.

இந்திய பி அணி ஜெர்மனியை 3-1 என வீழ்த்தியது. ருணாக், நிஹல் சரின் ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில் தமிழக வீரர்களான குகேஷும் பிரக்ஞானந்தாவும் தங்களுடைய ஆட்டங்களை டிரா செய்தார்கள். இதனால் ஜெர்மனியை வீழ்த்திய இந்திய பி அணி, வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்திய ஏ அணி, அமெரிக்காவுடனான ஆட்டத்தில் 2-2 என டிரா செய்தது. 

உஸ்பெகிஸ்தான் தனது முதல் இடத்தைத் தக்கவைத்து தங்கம் வென்றுள்ளது. அந்த அணி நெதர்லாந்தை 2.5-1.5 என வீழ்த்தியது. அர்மீனியா ஸ்பெயினை 2.5-1.5 என வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆசிய கோப்பைக்கான புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

தொடர் மழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஹிமாசல்: 360 பேர் பலி, 1001 சாலைகள் மூடல்!

ஞாயிறு இரவு நிகழும் சந்திரகிரகணம்: சிவப்பு நிலா பற்றிய முழு விவரம்

2026 உலகக் கோப்பை: முதல் ஆப்பிரிக்க நாடாக மொராக்கோ தேர்வு!

SCROLL FOR NEXT