செய்திகள்

ஜூனியர் உலக குத்துச் சண்டையில் முதன்முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!

DIN

இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனை அண்டிம் பங்கல்  53கிலோ பிரிவில் ஜூனியர் உலக குத்துச் சண்டையில் முதன் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். 

யு-20 உலக குத்துச் சண்டை போட்டியில் அண்டிம் பங்கல் எனும்முதன் முறியாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். 

புல்கேரியாவை சேர்ந்த சோபியாவை 8-0 எனற கணக்கில் வென்று தங்கம் வென்றார் அண்டிம் பங்கல். மற்ற இரண்டு இந்தியர்கள் சோனம், பிரியங்கா முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். இதனால் இந்திய அணி 160 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருந்தது. ஜப்பான் 230 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அமெரிக்கா 124 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

“உங்களுடைய கடின உழைப்பு மற்றும் ஈடுபாட்டிற்கு இந்தியா மரியாதை செலுத்துகிறது. ஒளிமயமான வருங்காலத்திற்கு வாழ்த்துகள். தொடர்ந்து ஜொலித்துக்கொண்டு இருங்கள்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரட்டியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஷகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் இலங்கை வீரர்!

"2025 முதல் அமித் ஷா பிரதமராவார்!”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 16.05.2024

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

SCROLL FOR NEXT