செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு 290 ரன்கள் இலக்கு: ஷுப்மன் கில் சதம்!

DIN

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை வெல்ல ஜிம்பாப்வே அணிக்கு 290 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் சதமடித்து அசத்தினார். 

மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 38.1 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி, 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

3-வது ஒருநாள் ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் சிராஜ், பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக தீபக் சஹார், அவேஷ் கான் இடம்பெற்றுள்ளார்கள். ஜிம்பாப்வே அணியிலும் இரு மாற்றங்கள். 

கே.எல். ராகுலும் ஷிகர் தவனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். 46 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ராகுலும் 68 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஷிகர் தவனும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஷுப்மன் கில்லும் இஷான் கிஷனும் நல்ல கூட்டணியை அமைத்தார்கள். 51 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார் இளம் வீரர் ஷுப்மன் கில். இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 

61 பந்துகளில் அரை சதமெடுத்தார் இஷான் கிஷன். இது அவருடைய 2-வது ஒருநாள் அரை சதம். எனினும் 50 ரன்களில் ரன் அவுட் ஆகி அவர் வெளியேறினார். ஷுப்மன் கில்லும் இஷான் கிஷனும் 3-வது விக்கெட்டுக்கு 127 பந்துகளில் 140 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். அடுத்து வந்த தீபக் ஹூடா 1 ரன்னில் இவான்ஸ் பந்தில் போல்ட் ஆனார். 82 பந்துகளில் தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தை எடுத்தார் ஷுப்மன் கில்.

சஞ்சு சாம்சன் 15 ரன்களிலும் அக்‌ஷர் படேல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார்கள். கடைசி ஓவரில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஷுப்மன் கில். 97 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடித்தார். ஷர்துல் தாக்குர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. ஜிம்பாப்வே வீரர் பிராட் இவான்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT