செய்திகள்

முதல் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு ஈடு கொடுத்ததா பாகிஸ்தான்

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 499 ரன்கள் குவித்துள்ளது.

DIN

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 499 ரன்கள் குவித்துள்ளது.

இமாலய இலக்கை குவித்த இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான இமாம்-உல்-ஹக் 90 ரன்களுடனும், அப்துல்லா ஷஃபீக் 89 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் இன்று (டிசம்பர் 3) மூன்றாம் நாள் ஆட்டம் தொடர்ந்தது. 

சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே சதமடித்து அசத்தினர். அப்துல்லா ஷஃபீக் 114 ரன்களிலும், இமாம்-உல்-ஹக் 121 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய சௌத் ஷகீல் 37 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

விக்கெட்டுகளை இழந்தாலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினார். அவர் 168 பந்துகளில் 136 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 19 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 499 ரன்கள் குவித்துள்ளது. அஹா சல்மான் 10 ரன்களுடனும், ஷகீல் முகமது 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்தைக் காட்டிலும் பாகிஸ்தான் 158 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT