அபிமன்யு ஈஸ்வரன் 
செய்திகள்

அபாரமாக பேட்டிங் செய்த பந்துவீச்சாளர்கள்: இந்திய ஏ அணி 562 ரன்கள் குவிப்பு!

முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 562 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

DIN

வங்கதேசம் ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 562 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்திய ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக செளராஷ்டிர முன்னாள் வீரர் ஷிதான்சு கொடாக்கும் டிராய் கூலி, வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் டி. திலீப்,ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரின் அபாரமான பந்துவீச்சில் வங்கதேச பேட்டர்கள் தடுமாறினார்கள். ஷஹாதத் ஹுசைன், ஜேக்கர் அலி மட்டும் நன்கு விளையாடி முறையே 80, 62 ரன்கள் எடுத்தார்கள். வங்கதேச ஏ அணி, 80.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்காலைச் சேர்ந்த 29 வயது முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

இந்திய ஏ அணி, 2-வது நாள் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 144, ஜெயந்த் யாதவ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இன்று, அபிமன்யு ஈஸ்வரன், 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய ஏ அணியின் கீழ்நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்டர்கள் அபாரமாக விளையாடி இந்திய அணி 550 ரன்களைத் தாண்ட உதவினார்கள். ஜெயந்த் யாதவ் 83, செளரப் குமார் 55, நவ்தீப் சைனி 50, முகேஷ் குமார் 23 ரன்கள் எடுத்தார்கள். 

இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 147.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 122 காசுகள் உயர்ந்து ரூ.90.27ஆக நிறைவு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான கனடா அணி விவரம்!

டி20 உலகக்கோப்பையில் புதுமுகம்: கால்பந்தாட்டப் பூமியிலிருந்து கிரிக்கெட் கனவுடன் ‘இத்தாலி!’

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்!

SCROLL FOR NEXT