செய்திகள்

ஜடேஜாவின் தமிழ்க் காதல்!

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

DIN

தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையை உடுத்தி அதன் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் ஜடேஜா.

பிரபல கிரிக்கெட் வீரரான ஜடேஜா, இந்திய அணிக்காக 60 டெஸ்டுகள், 171 ஒருநாள், 64 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 210 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தோனி, ரெய்னாவுக்கு அடுத்ததாக 150 ஆட்டங்களில் விளையாடிய 3-வது சிஎஸ்கே வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார். 

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3-வது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றார்.  ஆனால் சிஎஸ்கே அணி முதல் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதாலும் தன்னுடைய பேட்டிங் மோசமானதாலும் கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகினார் ஜடேஜா. இதையடுத்து கேப்டன் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்றுக்கொண்டார். 

இந்நிலையில்  தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து புதிய தோற்றத்துடன் உள்ள புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் ஜடேஜா. தென்னிந்தியாவின் அடையாளத்தை உணர்கிறேன். தமிழ்க்காதல் என ட்வீட் செய்துள்ளார். இதையடுத்து, அழகிய தமிழ் மகன் எனக் குறிப்பிட்டு ஜடேஜாவின் புகைப்படத்தை சிஎஸ்கே அணி பகிர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு வாருங்கள்! வங்கதேச புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு மோடி அழைப்பு!

ஆல்பர்ட் திரையரங்கில் இதயக்கனி படத்தின் 225-வது நாள்! ரசிகர்களோடு படம் பார்த்த இபிஎஸ்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20 வரை நடைபெறும்! - அப்பாவு

2030க்குள் 33% மின்சாரப் பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க காங்கிரஸுக்கு உரிமை உள்ளது! - Thirumavalavan | VCK | India alliance

SCROLL FOR NEXT