முகப்பு
செய்திகள்

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை: இந்தியா சாம்பியன் (விடியோ)

120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பைப் போட்டியை 3-வது முறையாக வென்றுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:07 AM
சதமடித்த அஜய் ரெட்டி
பகிர்:

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்றன. 

பெங்களூரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் வங்கதேசத்தை எதிர்கொண்டது இந்திய அணி. 

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 2 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. சுனில் ரமேஷ் 136 ரன்களும் கேப்டன் அஜய் ரெட்டி 100 ரன்களும் எடுத்தார்கள். ஆனால் வங்கதேச அணியால் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பைப் போட்டியை 3-வது முறையாக வென்றுள்ளது. 

இதற்கு முன்பு நடைபெற்ற 2012, 2017 பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பைப் போட்டிகளையும் இந்திய அணியே வென்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.