செய்திகள்

சிட்னி தண்டர் அணி 15 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது எப்படி?: ஹைலைட்ஸ் விடியோ

பிபிஎல் டி20 போட்டியில் சிட்னி தண்டர் அணி 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்துள்ளது. 

DIN

பிபிஎல் டி20 போட்டியில் சிட்னி தண்டர் அணி 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்துள்ளது. 

சிட்னியில் நடைபெற்ற பிபிஎல் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணி, முதல் ஓவரிலிருந்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. 5.5 ஓவர்களில் அதாவது 35 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் 15 ரன்களுக்கு இழந்து பெரிய தோல்வியைச் சந்தித்தது. ஹென்றி தார்ன்டன் 5 விக்கெட்டுகளையும் வேஸ் அகர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 5 பேட்டர்கள் டக் அவுட் ஆனார்கள். சிட்னி பேட்டர் டாக்கெட் அதிகபட்சமாக 4 ரன்கள் எடுத்தார். 

டி20 கிரிக்கெட்டில் வேறு எந்த அணியும் இதுபோல குறைந்த ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததில்லை. இதற்கு முன்பு 2019-ல் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் துருக்கி அணி, செக் குடியரசுக்கு எதிராக 21 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது டி20 வரலாற்றில் குறைந்த ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அணியாக சிட்னி தண்டர் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT