படம்: பிசிசிஐ 
செய்திகள்

2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் பேட்டிங்

இந்தியவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

DIN

இந்தியவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இன்றைய இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசn முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். வங்கதேச அணியில் இரண்டு வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

கேப்டன் ரோஹித் சா்மா காயத்திலிருந்து முழுமையாக மீளாததால் இந்த ஆட்டத்திலும் இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுகிறாா். இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குல்தீப் யாதவுக்கு பதிலாக உனத்கட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட்டில் வென்றிருக்கும் இந்தியா, இந்த கடைசி ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. தொடருக்காக மட்டுமல்லாமல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெறுவதற்காகவும் இந்த ஆட்டத்தின் வெற்றி இந்தியாவுக்கு அவசியமானதாகும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் மோசமான தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு (54.55 பிசிடி) சறுக்கியிருக்கிறது. தற்போது இந்தியா 2-ஆவது இடத்தில் (55.77 பிசிடி) இருக்கிறது.

எனவே, வங்கதேசத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்தியா சறுக்கினால் அந்த 2-ஆவது இடத்தை இழக்க நேரிடும். பட்டியில் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகளே இறுதி ஆட்டத்தில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT