செய்திகள்

ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்

தென்னாப்பிரிக்க அணிக்காக 2012 முதல் 2018 வரை 59 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்...

DIN

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஃபர்ஹான் பெஹர்தீன், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்காக 2012 முதல் 2018 வரை 59 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 39 வயது ஃபர்ஹான் பெஹர்தீன். ஒருநாள் கிரிக்கெட்டில் 6 அரை சதங்களும் டி20யில் ஒரு அரை சதமும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடியுள்ளார். 2017-ல் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தெ.ஆ. கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

கடந்த 18 வருடங்களில் ஒருநாள் கூட நான் வேலை செய்யவில்லை. கிரிக்கெட்டை ஆர்வத்துடன் விளையாடினேன். 4 உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றதை ஆசீர்வாதமாகக் கருதுகிறேன் என்று ஓய்வு அறிவிப்பில் ஃபர்ஹான் பெஹர்தீன் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT