கம்மின்ஸ் 
செய்திகள்

ஐபிஎல் ஏலம்: பெருமளவு சம்பளம் குறைந்த வீரர்கள் யார் யார்?

கடந்த வருடம் கே. கெளதமை ரூ. 9.25 கோடிக்குத் தேர்வு செய்து  ஆச்சர்யப்படுத்தியது சிஎஸ்கே.

DIN

ஐபிஎல் மெகா ஏலத்தில் 204 வீரர்கள் மொத்தமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 10 அணிகளும் ஏலத்தில் தேர்வான வீரர்களுக்காக மொத்தமாக ரூ. 552 கோடியை ஒதுக்கியுள்ளன. 15 இந்திய வீரர்களும் 13 வெளிநாட்டு வீரர்களும் தலா ரூ. 7.50 கோடிக்கு மேல் சம்பளம் பெறவுள்ளார்கள்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல் அதிக சம்பள உயர்வு பெற்றுள்ளார். கடந்த வருடம் ஆர்சிபி அணிக்கு ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வான ஹர்ஷல் படேல் இம்முறை ரூ. 10.75 கோடிக்குத் தேர்வாகியுள்ளார். அதாவது 5275% சம்பள உயர்வு!

கடந்த வருடம் ரூ. 20 லட்சத்துக்கு கொல்கத்தா அணியில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா, இம்முறை ராஜஸ்தான் அணியில் ரூ. 10 கோடிக்குத் தேர்வாகியுள்ளார். 4900% சம்பள உயர்வு. வெளிநாட்டு வீரர்களில் கடந்த வருடம் ரூ. 20 லட்சத்துக்கு ஆர்சிபி அணியில் விளையாடிய டிம் டேவிட், இம்முறை மும்பை அணியில் ரூ. 8.25 கோடிக்குத் தேர்வாகியுள்ளார். 4025% சம்பள உயர்வு.

சரி, எந்தெந்த வீரரளுக்குப் பெருமளவு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது?

இங்கிலாந்தின் டைமல் மில்ஸ், 2017 ஏலத்தில் ரூ. 12 கோடிக்கு ஆர்சிபி அணியில் தேர்வானார். ஆனால் இம்முறை மும்பை அணிக்கு ரூ. 1.50 கோடிக்கு மட்டுமே தேர்வாகியுள்ளார். ரூ. 10.50 கோடிக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. 

அடுத்தது இடம் சிஎஸ்கே வீரருக்கு. கடந்த வருடம் கே. கெளதமை ரூ. 9.25 கோடிக்குத் தேர்வு செய்து  ஆச்சர்யப்படுத்தியது சிஎஸ்கே. இம்முறை லக்னெள அணி, கெளதமை ரூ. 0.90 கோடிக்கு மட்டுமே தேர்வு செய்துள்ளது. ரூ. 8.35 கோடி நஷ்டம்.

கடந்த வருடம் ரூ. 15.50 கோடிக்கு கொல்கத்தா அணியில் தேர்வானார் பேட் கம்மின்ஸ். இம்முறை ரூ. 7.25 கோடிக்கு அவரைத் தேர்வு செய்துள்ளது அதே கொல்கத்தா அணி. கம்மின்ஸுக்கு ரூ. 8.25 கோடி நஷ்டம். ஆனால் அதே அளவு தொகை கொல்கத்தா அணிக்கு லாபம்!

கடந்த வருடம் ரிலி மெரிடித்தை ரூ. 8 கோடிக்கு பஞ்சாப்பும் மனிஷ் பாண்டேவை ரூ. 11 கோடிக்கு சன்ரைசர்ஸும் தேர்வு செய்தன. இந்த வருடம் மெரிடித்தை ரூ. 1 கோடிக்கு மும்பையும் மனிஷ் பாண்டேவை ரூ. 4.60 கோடிக்கு லக்னெளவும் தேர்வு செய்துள்ளன. மெரிடித்துக்கு ரூ. 7 கோடியும் மனிஷ் பாண்டேவுக்கு ரூ. 6.40 கோடியும் இதனால் நஷ்டம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT