செய்திகள்

சஹாவை மிரட்டிய பத்திரிகையாளர் யார்?: பிசிசிஐ விசாரணை

அந்தப் பத்திரிகையாளரின் பெயரை சஹா வெளியிடவேண்டும் என்று பல கிரிக்கெட் வீரர்களும் சஹாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

DIN

பத்திரிகையாளர் ஒருவரால் விக்கெட் கீப்பர் சஹா மிரட்டப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலியின் விலகலையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். சஹா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை. 

இந்திய அணியில் தன்னைச் சேர்த்துக்கொள்ளாதது பற்றி அதிருப்தி தெரிவித்துள்ள சஹா, பிரபல பத்திரிகையாளர் ஒருவருக்குத் தான் பேட்டியளிக்க மறுத்ததால் தன்னை அவர் குறுந்தகவல் வழியாக மிரட்டியதாகவும் பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அந்தப் பத்திரிகையாளர் அனுப்பிய வாட்சப் தகவலையும் ட்விட்டரில் நேற்று பகிர்ந்தார். இதையடுத்து அந்தப் பத்திரிகையாளரின் பெயரை சஹா வெளியிடவேண்டும் என்று பல கிரிக்கெட் வீரர்களும் சஹாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் பிசிசிஐ ஒப்பந்தத்தில் சஹா உள்ளதால் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சஹாவிடம் இதுபற்றி விசாரித்துவிட்டு மேலும் வேறு எந்த வீரராவது இதுபோன்ற மிரட்டல்களுக்கு ஆளானார்களா என்பது குறித்தும் விசாரிக்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

SCROLL FOR NEXT