செய்திகள்

கரோனாவிலிருந்து மீண்ட மெஸ்ஸி

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து விலகிய லியோனல் மெஸ்ஸி, பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் இணைந்தார். சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர் (Ballon d'Or) விருதை 7-வது முறையாக மெஸ்ஸி சமீபத்தில் வென்றார். 

இந்நிலையில் கரோனாவால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டார் மெஸ்ஸி. இதனால் ஜனவரி 4 அன்று நடைபெற்ற பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் அணியின் ஆட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் மெஸ்ஸி உடல்நிலை பற்றிய சமீபத்திய தகவலை பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப் அறிவித்துள்ளது.

பரிசோதனையில் மெஸ்ஸிக்கு கரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. பாரிஸுக்கு அவர் வந்துவிட்டார். சில நாள்களில் அணியினருடன் இணைந்துவிடுவார் என்று பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சுக்குள் நீதான்... ருக்மணி வசந்த்!

சீனிப் பழமே... அபர்ணா தாஸ்!

விமர்சிக்கப்படும் சாய் அபயங்கர் டூட் பாடல்!

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!

SCROLL FOR NEXT