செய்திகள்

வாஷிங்டன் சுந்தருக்கு கரோனா: தெ.ஆ. செல்வாரா?

ஒருநாள் தொடரில் விளையாட தென்னாப்பிரிக்காவுக்குச் செல்வது சந்தேகம் எனத் தெரிய வந்துள்ளது.

DIN

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஒருநாள் தொடரில் விளையாட தென்னாப்பிரிக்காவுக்குச் செல்வது சந்தேகம் எனத் தெரிய வந்துள்ளது.

22 வயது வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக 4 டெஸ்ட், 1 ஒருநாள், 31 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராகக் கடந்த மார்ச் மாதம் விளையாடினார். பிறகு காயம் காரணமாக அவரால் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை.

கடந்த வாரம் கரோனாவால் பாதிக்கப்பட்டார் வாஷிங்டன் சுந்தர். பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் உள்ள வாஷிங்டன், தனிமைப்படுத்துதல் காலத்தை விரைவில் முடிக்கவுள்ளார். 

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி பங்கேற்கும் ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். இந்திய வீரர்கள் இந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லவுள்ளார்கள். இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் வாஷிங்டன் சுந்தரால் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்ல முடியுமா என பிசிசிஐ யோசித்து வருகிறது. இதனால் ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் விஜய் ஹசாரே போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர், 148 ரன்களும் 16 விக்கெட்டுகளும் எடுத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT