செய்திகள்

ஷேன் வார்னே பற்றி பேச விருப்பம் இல்லை: மிட்செல் ஸ்டார்க்

ஆஷஸ் தொடருக்கு முன்பு தன்னை விமர்சனம் செய்த முன்னாள்  வீரர் ஷேன் வார்னே பற்றி பேச விரும்பவில்லை...

DIN

ஆஷஸ் தொடருக்கு முன்பு தன்னை விமர்சனம் செய்த முன்னாள்  வீரர் ஷேன் வார்னே பற்றி பேச விரும்பவில்லை என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். 

31 வயது ஸ்டார்க், ஆஸ்திரேலிய அணிக்காக 2010 முதல் 66 டெஸ்டுகள், 99 ஒருநாள், 48 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். ஆஷஸ் தொடரை 4-0 என ஆஸ்திரேலியா வென்றது. 5 டெஸ்டுகளிலும் விளையாடிய ஸ்டார்க், 19 விக்கெட்டுகள் எடுத்தார். 

2021-ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 11 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார் ஸ்டார்க். டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் 4 ஓவர்கள் வீசி விக்கெட் இன்றி 60 ரன்கள் கொடுத்தார். இதனால் ஸ்டார்க்கின் பந்துவீச்சு விமர்சனத்துக்கு ஆளானது. ஆஷஸ் முதல் டெஸ்டில் ஸ்டார்க்குக்குப் பதிலாக ஜை ரிச்சர்ட்சன் விளையாட வேண்டும் என முன்னாள் ஆஸி. வீரர் ஷேன் வார்னே கூறினார். 

இந்நிலையில் ஒரு பேட்டியில் ஸ்டார்க் கூறியதாவது:

கடந்த வருடம் கடினமாக இருந்தது. நான் நினைத்தது போல என்னால் பந்துவீச முடியவில்லை. சில நேரங்களில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடவே நான் விரும்பவில்லை. 

வார்னேவின் விமர்சனம் பற்றி பேசச் சொல்கிறீர்கள். அதில் எனக்கு ஆர்வமே கிடையாது. அவருக்குத் தன் கருத்தைச் சொல்ல உரிமை உள்ளது. நான் விரும்பும் விதத்தில் கிரிக்கெட் விளையாடப் போகிறேன். எனக்குக் குடும்பத்தினரின் ஆதரவு உள்ளது. திறமையான வீரர்களுடன் இணைந்து விளையாடுகிறேன். எனவே செளகரியமான சூழலில் நான் உள்ளேன். என் வட்டத்துக்கு வெளியே கூறப்படுவது பற்றி நான் அக்கறைப்படுவதில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து ரேசன் அட்டையையும் நிலத்தையும் இழக்க நேரிடும்: வாக்காளர்ளுக்கு ராகுல் எச்சரிக்கை!

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்! என்ன நடக்கிறது?

முதல்முறையாக ஆஸ்கருக்கு தேர்வான பப்புவா நியூ கினிய திரைப்படம்! பா.இரஞ்சித் தயாரிப்பு!

இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா? - முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை! முழு விவரம்

SCROLL FOR NEXT