செய்திகள்

இங்கிலாந்து அணிக்குப் புதிய கேப்டன் நியமனம்

இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டனாகப் பிரபல வீரர் ஜாஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டனாகப் பிரபல வீரர் ஜாஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கி கோப்பையை வென்ற இயன் மார்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகச் சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து இங்கிலாந்து அணிக்குப் புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பேட்டரான ஜாஸ் பட்லர், இங்கிலாந்து ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்காக 9 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் அவர் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். கேப்டனாக அறிவிக்கப்பட்ட பட்லர், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் தனது புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் மேத்யூ மாட் நியமிக்கப்பட்டார். எனவே இங்கிலாந்து அணி டெஸ்ட், வெள்ளைப் பந்து என அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் புதிய கூட்டணியுடன் பயணிக்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனிருதா ஸ்ரீகாந்த் - சம்யுக்தா திருமணம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொக்கப்பனை முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி!

சூழ்-நிலை... க்ரித்தி சனோன்!

வேகமெடுக்கும் டிக்வா புயல்: தமிழகம் நோக்கி நகர்வு!

உதயநிதி பிறந்தநாள்! முதல்வரிடம் வாழ்த்து; கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை!

SCROLL FOR NEXT