செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த மாற்றம் தேவை: ரவி சாஸ்திரி

புதிய சிந்தனைகளுடன் முன்னேறிச் செல்லவேண்டும். நீண்ட நாளாகவே...

DIN

ஒருநாள் கிரிக்கெட்டை 50 ஓவர்களில் இருந்து 40 ஓவர்களாகக் குறைக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி யோசனை தெரிவித்துள்ளார்.

பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் எதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும், போட்டி அட்டவணை எப்படி அமையவேண்டும் என்கிற விவாதம் உருவாகியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் இழுவையாக, சுவாரசியமின்றி உள்ளதாகத் தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டைச் சுவாரசியமாக்க முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு யோசனை தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ஒருநாள் கிரிக்கெட்டில் ஓவர்களைக் குறைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. ஒருநாள் கிரிக்கெட் ஆரம்பிக்கப்படும்போது 60 ஓவர்கள் வீசப்பட்டன. நாங்கள் 1983-ல் உலகக் கோப்பையை வென்றபோது 60 ஓவர்களுக்குத்தான் உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்றது. 60 ஓவர்கள் என்பது அதிகமாக இருப்பதாகவும் 20-40 ஓவர்கள் வரையிலான பகுதி தொய்வாக இருப்பதாகவும் கூறினார்கள். இதனால் ஒருநாள் கிரிக்கெட் 50 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. அந்த முடிவை எடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. எனவே ஒருநாள் கிரிக்கெட்டை ஏன் 40 ஓவர்களாகக் குறைக்கக்கூடாது? புதிய சிந்தனைகளுடன் முன்னேறிச் செல்லவேண்டும். நீண்ட நாளாகவே 50 ஓவர்களுடன் ஒருநாள் கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT