செய்திகள்

கடந்த 13 இன்னிங்ஸில் 6 முறை 150+ ரன்கள்: சர்ஃபராஸ் கான் மீண்டும் சதம்

கடந்த 13 இன்னிங்ஸில் 6 முறை 150 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார்.

DIN

ரஞ்சி கோப்பைப் போட்டியில் உத்தரகண்ட் அணிக்கு எதிராகச் சதமடித்துள்ளார் மும்பை அணி வீரர் சர்ஃபராஸ் கான்.

பெங்களூரு - அலூரில் மும்பை - உத்தரகண்ட் அணிகளுக்கு எதிரான ரஞ்சி கோப்பைக் காலிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் மும்பை அணி, 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அறிமுக வீரர் சுவெத் பார்கர் 104, சர்ஃபராஸ் கான் 69 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று 140 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் சதத்தைப் பூர்த்தி செய்தார் 24 வயது சர்ஃபராஸ் கான். மேலும் இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 4 ஆட்டங்களில் 704 ரன்கள் எடுத்துள்ளார். 3 சதங்கள், ஒரு அரை சதம். சராசரி - 140.80 ரன்கள். ஸ்டிரைக் ரேட் - 72.65.

மும்பை அணி 117 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 444 ரன்கள் எடுத்துத் தொடர்ந்து விளையாடி வருகிறது. சர்ஃபராஸ் கான் 153 ரன்களில் ஆட்டமிழந்தார். பார்கர் 156 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

ரஞ்சி கோப்பைப் போட்டியில் கடந்த 13 இன்னிங்ஸில் 6 முறை 150 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார். அதில் 1 முச்சதம், 2 இரட்டைச் சதங்கள் என நம்பமுடியாத அளவுக்குத் தொடர்ந்து ரன்கள் குவித்து வருகிறார். 

ரஞ்சி போட்டியில் சர்ஃபராஸ் கான்: கடந்த 13 இன்னிங்ஸில்

71*(140)
36(39)
301*(391)
226*(213)
25(32)
78(126)
177(210)
6(9)
275(401)
63(110)
48(72)
165(181)
153(205)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் பணிக்கு ஆசிரியா்கள்: மாா்க்சிஸ்ட் கண்டனம்

அரசு தொழில்நுட்பக் கல்லூரி மகளிா் விடுதி உணவகத்துக்கு நோட்டீஸ்

கல்லூரி மாணவா் இறப்பில் சந்தேகம் என புகாா்

பல்வேறு பட்டியல்களில் இருக்கும் பெயா்களை ஒரே பெயரில் அமைக்க வேண்டும்

புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்கள் மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT