டேரில் மிட்செல் - பிளண்டல் 
செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் அபாரமாக விளையாடிய நியூசிலாந்து (விடியோ)

நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

நாட்டிங்கமில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது.

லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை.

முதல் விக்கெட்டுக்கு கேப்டன் டாம் லதமும் வில் யங்கும் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் எடுத்தார்கள். வில் யங் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து அணி. இதன்பிறகு ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல்லும் பிளண்டலும் நல்ல கூட்டணியை அமைத்தார்கள். இருவர் கூட்டணி இதுவரை 149 ரன்களை எடுத்துள்ளது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் 81 ரன்களும் பிளண்டல் 67 ரன்களும் எடுத்துக் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT