செய்திகள்

உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி: அதிரடியான 26 சிக்ஸர்களின் விடியோ

DIN

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் எடுத்தது. சால்ட் 122, மலான் 125, பட்லர் 162 ரன்கள் எடுத்தார்கள். லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் பட்லர் 70 பந்துகளில் 14 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 162 ரன்களும் எடுத்தார்கள். இதன்பிறகு விளையாடிய நெதர்லாந்து அணி, 49.4 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து 232 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக பட்லர் தேர்வானார்.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 498/4 - ஒருநாள் ஆடவர் கிரிக்கெட்டில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது. ஆடவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டிலும் இதுவே அதிகபட்ச ஸ்கோர். 

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 26 சிக்ஸர்களை அடித்தது. இதுவும் ஓர் உலக சாதனை. இதற்கு முன்பு 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் அந்த அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 25 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. 36 ஃபோர்கள், 26 சிக்ஸர்கள் என பவுண்டரிகள் மூலமாக 300 ரன்களை எடுத்த முதல் ஒருநாள் அணி என்கிற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது. 

கடைசி 10 ஓவர்களில் 164 ரன்கள் அடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளது இங்கிலாந்து அணி. இதற்கு முன்பு தென்னாப்பிரிக்க அணி, 2015-ல் மே.இ. தீவுகளுக்கு எதிராகக் கடைசி 10 ஓவர்களில் 163 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. 

இங்கிலாந்து அணி அடித்த உலக சாதனை 26 சிக்ஸர்கள் மற்றும் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோக்கள்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி

வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி!

இந்தூர்: 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக வேட்பாளர்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும்: ராகுல்

கங்கனா ரணாவத், அனுராக் தாக்குர்.. வெற்றி!

SCROLL FOR NEXT