செய்திகள்

நியூசிலாந்தின் ஆதிக்கத்தை நொறுக்கிய பேர்ஸ்டோ: அற்புதமான பேட்டிங்கின் ஹைலைட்ஸ் விடியோ

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் சதமடித்து அணியைச் சரிவிலிருந்து மீட்டுக்கொண்டு வந்துள்ளார் பேர்ஸ்டோ.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் சதமடித்து அணியைச் சரிவிலிருந்து மீட்டுக்கொண்டு வந்துள்ளார் பேர்ஸ்டோ.

முதல் இரு டெஸ்டுகளை வென்று தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ள நிலையில் 3-வது டெஸ்ட் லீட்ஸில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 117.3 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 109 ரன்கள் எடுத்தார். ஜேக் லீச் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் முதல் 6 விக்கெட்டுகளை 55 ரன்களுக்கு இழந்து தடுமாறியது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ, ஓவர்டன் பிரமாதமாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார்கள். பவுண்டரிகளாக அடித்துத் தள்ளி விரைவாக ரன்கள் எடுத்த பேர்ஸ்டோ, 95 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் சதத்தைப் பூர்த்தி செய்தார். கடைசிவரை பேர்ஸ்டோ - ஓவர்டன் ஜோடியை நியூசி. அணியால் பிரிக்கவே முடியவில்லை. இங்கிலாந்து அணி, 2-ம் நாள் முடிவில் 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. பேர்ஸ்டோ 130, ஓவர்டன் 89 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

சென்செக்ஸ் 301.93 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

குழம்பு சுவைக்க.. மணக்க! அற்புதமான யோசனைகள்!!

மாதவிடாய் காலத்தில்கூட... தனுஷ் படக்குழு மீது குற்றம்சாட்டிய பார்வதி!

SCROLL FOR NEXT