செய்திகள்

விம்பிள்டன்: பிரபல வீரர் தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரபல வீரர் ஆன்டி முர்ரே 2-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார். 

DIN

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரபல வீரர் ஆன்டி முர்ரே 2-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார். 

விம்பிள்டன் போட்டியில் 2013, 2016 ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆன்டி முர்ரே. முன்னாள் நெ. 1 வீரர். லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் ஒற்றையர் 2-வது சுற்றில் ஜான் இஸ்னரை எதிர்கொண்டார்.

ஆன்டி முர்ரேவின் வெற்றியை அனைவரும் எதிர்பார்த்த நிலையில் 37 வயது ஜான் இஸ்னர் அபாரமாக விளையாடி 6-4, 7-6 (4), 6-7 (3), 6-4 என்ற செட்களில் ஆன்டி முர்ரேவைத் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இஸ்னர், 2018-ல் அரையிறுதிக்கு முன்னேறியவர். இந்த ஆட்டத்தில் 36 ஏஸ்களின் உதவியுடன் முதல்முறையாக முர்ரேவை வீழ்த்தியுள்ளார். 

விம்பிள்டன் போட்டியில் 2005, 2021 ஆண்டுகளில் 3-வது சுற்றில் வெளியேறிய முர்ரே, இம்முறை 2-வது சுற்றுடன் வெளியேற நேர்ந்துள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT