ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆல்-ரௌண்டர்களில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (385 புள்ளிகள்) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிக்க | லக்னௌ அணியில் மாற்றம்: இங்கி. வீரருக்குப் பதில் ஆஸி. வீரர் தேர்வு
இதனால், 357 புள்ளிகளுடன் அவர் ஆல்-ரௌண்டர்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்திலும், ஜாஸ்பிரித் பும்ரா 4-வது இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லபுஷேன் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். 196 ரன்கள் விளாசி இரண்டாவது டெஸ்டை டிரா செய்ய உதவிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.