செய்திகள்

அரையிறுதியில் இங்கிலாந்து: வங்கதேசம் படுதோல்வி

DIN


மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

மகளிர் உலகக் கோப்பை லீக் சுற்றின் மிக முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து, வங்கதேச அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும் என்ற நிர்பந்தத்தில் களமிறங்கிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சோஃபியா டன்க்லேவின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய வங்கதேசம், இங்கிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 48 ஓவர்களில் 134 ரன்களுக்கு வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம், 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே மற்றொரு ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு முன்னேறும். இல்லையெனில் 7 புள்ளிகளுடன் மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி " - சித்தராமையா

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT