செய்திகள்

மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகளில் சாதித்து வரும் இங்கிலாந்து அணி

DIN

கடந்த நான்கு மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா என முதல் மூன்று ஆட்டங்களில் தோற்றது இங்கிலாந்து. இதன்பிறகு வரிசையாக நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி இன்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 137 ரன்கள் வித்தியாசத்தில் அரையிறுதியை வென்ற இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. உலகக் கோப்பைப் போட்டியில் 6-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களில் பங்கேற்ற நான்கு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஒருமுறை மட்டுமே இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறாமல் இருந்தது.

2017 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, அடுத்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றில் இடம்பெற்றது. 2020 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியுடன் வெளியேறியது. மழை காரணமாக சிட்னியில் நடைபெறுவதாக இருந்த அரையிறுதி ஆட்டம் ரத்தானது. லீக் சுற்றில் இந்தியாவை விட குறைவான புள்ளிகளைக் கொண்டிருந்ததால் இங்கிலாந்து வெளியேறியது. இம்முறை கடுமையாக உழைத்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பையில் இங்கிலாந்து

2017 உலகக் கோப்பை - சாம்பியன்
2018 டி20 உலகக் கோப்பை - இறுதிச்சுற்றுக்குத் தகுதி
2020 டி20 உலகக் கோப்பை - அரையிறுதி வரை முன்னேறியது
2020 உலகக் கோப்பை - இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்*

(* இன்னும் இறுதிச்சுற்று நடைபெறவில்லை.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT